
About Temple
In the early days, it was a small wooden temple located in a rubber plantation called Buloh River Estate. Now, the place is known as Puspatri Johor Skill, where the temple was built and worshiped by people who lived and worked in that area.
The Maha Mariamman Temple is one of the oldest temples in this area. Many years later the Buloh River Estate was taken for development by the state government. The residents who lived there for many years started to move elsewhere. Some migrated to SEDC (State Economic Development Corporation) apartment houses in Pasir Gudang area and some moved to other nearby estates.
Few year later, the Indian workers who worked at MSE (Malaysian Shipyard and Engineering) in 1980’s, found out that there was a hindu goddess temple at the Buloh River Estate. Few of them including Mr. Subbaiah with his wife and Mr. K. Sivasubramaniam visited the temple. At that time, the temple was managed and maintained without electricity and water by Mr. and Mrs. Muniandi’s family. Later the son of Mr. Muniandi and the present temple keeper Mr. Siwapiragam and his brother Mr. Velayutham was maintaining the temple. Since there is no electricity and water at early stage, water from a nearby pond was used for prayer and cleaning the temple.
Mr. Muniandi was explaining about the history of the temple to MSE workers. Due to heavy work load and lack of time, they were unable to perform daily kriyas properly. So, Mr. Siwa has decided to handover to MSE workers. Since then, MSE Indian workers started to do regular kriyas like prayers and Pooja’s accordingly. Mr. Subbaiah was the first priest in the temple while working full time in MSE in the early days.
The MSE workers decided to learn more about this temple. They approached 60 years old Mr. Haji, who lived in Kampung Pasir Gudang Baru, near the temple. He could recalled playing with Malay and Indian kids around the temple when he was about 10 or 12 years old. He remembered and explained many excited things that happened in this temple. Based on his given information and other collected data/facts, the temple could be 100 years old. After receiving all the information about the temple, we have started to submit proper application to the Registration Department. The application sent was approved and followed by the Certificate of Registration, which was issued on 25th August 1982 to officially manage the temple.
At the same time, we have formed a temporary executive committee as follows; Chairman- Mr. Chandrasekhar, Deputy Chairman- Mr. Marimuthu, Secretary- B. Nagaraja (PIS), Treasurer- Mr. Krishnan, Committee: Mr. Arumugam, Mr. Manikam, Mr. Subbiah, Mr. K. Sivasubramaniam, and Mr. Baskaran. Shortly, we performed a Kumbabhishekam for Goddess Ambal in a small manner as well.
The MSE Indian workers together with all Hindus living in Pasir Gudang area submitted a petition request to SEDC to get a permanent land for the temple. Initially, the authority has given few places, which was not suitable for the temple. Either, it was too far from the residential area and no public transportation was available or some places are occupied by other ethnic majority groups.
After several attempt, with the blessings of Goddess Ambal, a permanent land was obtained from the Authority. The land now known as Nambi Estate. The previous chairman Mr. Chandrasekhar continued to serve for 2 years. Then B. Nagaraja (PIS) served for about 15 years, followed by Mr. Marimuthu for 20 years. Since year 2020 till today, Mr. Krishnan is serving as temple Chairman.
Many people have given their selfless hard work, time and money for the temple. At the same time we give our special thanks to former MIC Chairman Tan Sri G. Pasamanikam, Dato K.S. Balakrishnan and Pasir Gudang former MIC Chairman and current New Temple Advisor Mr. Sabapathy for their involvement and contribution to get allocation and a piece of land from the state government. Our former Johor MB YB Datuk Seri Khaleed Nordin has also assisted in many ways towards the temple as well.
Now, we are building a new temple on the land given by the state Government. We have set up a Temple Building Fund for the Public. Anyone who wish to donate or contribute any amount will be very much appreciated.
தலை வரலாறு
வணக்கம். தற்போது அனைத்து இந்திய பொது மக்களும் சென்று வழிபடும் ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவிலின் வரலாற்றினை பின்வருமாறு குறிப்பிடுகிறோம்.
ஆரம்பகாலத்தில் இந்த கோவில் புலோ ரிவெர் என்னும் ரப்பர் தோட்டத்தில் ஒரு சிறிய கோவிலாக அமைந்திருந்தது. அதாவது தற்பொழுது புஸ்பாஸ்திரி ஜோகூர் ஸ்கீல் என்று அழைக்கப்படும் இடத்தில் தான், அந்த காலத்தில் இக்கோவில், தோட்டத்தில் வாழ்ந்த மக்களால் அமைக்கப்பட்டு, அவர்களால் வழிப்படபட்டும் வந்தது.
மிக பழமை வாய்ந்த இந்த மஹா மாரியம்மன் ஆலயம், ஆரம்ப காலத்தில் அந்த தோட்டப்புறத்தில் வசித்தவர்களாலும், அங்கு பணிப்புரிந்த மக்களாலும் வணங்கப்பட்டும், பராமரிக்கப்பட்டும் வந்தது. சில வருடங்களுக்கு பிறகு, புலோ ரிவெர் தோட்ட நிலம் துண்டாடப்பட்டது. அச்சமயம் அங்கு வாழ்ந்த மக்கள் வேறு இடம் பெயர்ந்து செல்ல ஆரம்பித்தனர். சிலர் எஸ்.இ.டி.சி அடுக்குமாடி வீடுகளுக்கு குடி பெயர்ந்தனர். மற்றும் சிலர் இதர தோட்டப் பகுதிகளுக்கு குடி பெயர்ந்தனர்.
1980தில் பாசீர் கூடாங் கப்பல் பட்டறையில் பணிபுரிந்த எம்.எஸ்.இ. இந்தியர்கள், புலோ ரிவெர் எஸ்டேட்டில் ஒரு அம்மன் கோவில் இருப்பதை அறிந்து கொண்டு அவ்விடத்திற்குச் சென்றனர். அவர்கள் திரு. சுப்பையா, அவர் தம் மனைவி மற்றும் திரு. கா. சிவசுப்ரமணியம் ஆவர். அச்சமயம் இந்த கோவிலை திரு. முனியாண்டி குடும்பத்தினர் மின்சாரமும் நீர் வசதியும் இன்றி பராமரித்து வந்தனர். அதன் பிறகு திரு. முனியாண்டியின் மகனுமான மற்றும் தற்போதைய கோவில் அரங்காவலருமான திரு. சிவபிரகாசம், அவர் தம் மனைவி, அவருடைய சகோதரர் திரு. வேலாயுதம் அவர் தம் மனைவியும் இந்த கோவிலை அச்சமயம் பராமரித்து கொண்டிருந்தனர்.
மின்சார வசதியும், நீர் வசதியும் இல்லாத காரணத்தினால் ஆங்காங்கே தோண்டபட்டு இருந்த குழியிலிருந்து எடுக்கப்பட்ட நீரையே அபிஷேகத்திற்கும் மற்றும் கோவிலை சுத்தம் செய்யவும் பயன்படுத்தி வந்தனர். அங்கு சென்ற எம்.எஸ்.இ. இந்தியர்களிடம், இந்த ஆலயம் உறுவான வரலாற்றை திரு. முனியாண்டி அவர்கள் கூறினார்.
திரு. முனியாண்டி அவர்களின் மகன் திரு. சிவபிரகாசம் அவர்கள், அதிக வேலை பழுவின் காரணமாகவும், நேரமின்மையினால் இக்கோவில் பூஜை புனஸ்காரங்களையும், கோவில் பராமரிப்பையும் சரிவர செய்ய இயலவில்லை என கூறினார். ஆகையால் இக்கோவிலை எம்.எஸ்.இ. இந்தியர்களிடம் திரு. சிவபிரகாசம் அவர்கள் ஒப்படைத்தார். அன்று முதல் அவ்விடத்திலேயே எம்.எஸ்.இ. இந்தியர்கள் அம்பாளுக்கு பூஜைகளும், அபிஷேகங்களும் செய்து வந்தனர்.
அதோடு இல்லாமல் எம்.எஸ்.இ. இந்தியர்கள் இக்கோவிலின் பற்றி மேலும் அறிய, கம்போங் பாசீர் கூடாங் பாரு என்ற கம்பத்தில் வாழ்ந்த 60 வயது ஹஜி அவர்களிடம் கோவில் பற்றி சில விஷயங்களைக் கேட்டு தெரிந்துக் கொண்டனர். அவர் கூறியதாவது, ஹஜி அவர்களுக்கு 10 அல்லது 12 வயது இருக்கும் போதே இந்த அம்மன் கோவிலை சுற்றி அவரும் மற்றும் மலாய், இந்திய சிறுவர்களும் விளையாடியதாக கூறினார். இன்னும் இந்த கோவிலில் நடந்த பல சுவையான விஷயங்களையும் நினைவு கூர்ந்தார். இவர் கூறிய காலகட்டத்தைப் பார்த்தால் சுமார் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோவிலாக இருந்தது. ஹஜி அவர்கள் கூறிய நினைவுகளை வைத்து பதிவு இலாக்கா அலுவலகத்திற்கு முறைபடி விண்ணப்ப பாரத்தை சமர்பித்தோம். பதிவு இலாக்காவால் நாங்கள் அனுப்பிய விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டது. அதை தொடர்ந்து 25 ஆகஸ்ட் 1982 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக கோவிலை நடத்துவதற்கு சான்றிதழை பதிவு இலக்காவினர் வழங்கினார்கள்.
அதே சமயம், ஒரு தற்காலிக நிர்வாக குழுவை உறுவாக்கினார்கள். அந்நிர்வாக குழுவின் தலைவர் திரு. சந்திரசேகர், துனணத் தலைவர் திரு. மாரிமுத்து, செயளாலர் திரு. பி. நாகராஜா (பி.ஐ.எஸ்), பொருளாளர் திரு. கிருஷ்ணன் மற்றும் செயலவை உறுப்பினர்களாக திரு. ஆறுமுகம், திரு. மாணிக்கம், திரு. சுப்பையா, திரு. கா. சிவசுப்ரமணியம் மற்றும் திரு. பாஸ்கரன் என நிர்வாக செயற்குழு நிறுவப்பட்டது. சிறிய முறையில் அம்பாளுக்கு கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டது.
இத்துடன் நின்றிடாமல், எம்.எஸ்.சி. இந்தியர்கள், பாசீர் கூடாங் வட்டாரத்திலேயே எல்லா இந்து மக்களும் சிரமமின்றி வந்து அந்த மஹா மாரியம்மனை வழிபடவும், இக்கோவிலுக்கென்று ஒரு நிரந்தர நிலமும் கிடைக்க வேண்டி, எஸ்.இ.டி.சி நிறுவனதிடம் மனு ஒன்றினைச் சமர்பித்தனர்.
அதன்படி, ஒரு சில இடங்கள் கிடைக்கப்பெற்றன. இருப்பினும் அவ்விடங்கள் இந்து மக்கள் வாழும் இடத்திற்கு அருகாமையில் இல்லாததாலும், உட்புற பகுதியாக இருந்ததாலும், மற்ற இனத்தவர் வாழும் இடமாக இருந்தமையாலும், நிலம் கிடைக்க மிக சிரம்மாக இருந்தது.
பல நாட்கள் முயற்சிக்கு பின்னர் அம்பாளின் அருள் ஆசியுடன் தற்போது வீற்றிருக்கும் நிலத்தில், நம்பி தோட்டம் என்று அழைக்கப்பட்ட இடத்தில் நிரந்தர நிலம் கிடைக்கப்பெற்றது. இக்கோவில் தலைவராக திரு. சந்திரசேகர் அவர்கள் 2 ஆண்டுகள் சேவையாற்றினார். அதன் பிறகு திரு. பி. நாகராஜா (பி.ஐ.எஸ்) அவர்கள் சுமார் 15 ஆண்டுகள் கோவில் தலைவராக சேவையாற்றினார். அதை தொடர்ந்து திரு. மாரிமுத்து அவர்கள் சுமார் 20 ஆண்டுகள் கோவில் தலைவராக சேவையாற்றினார். சென்ற 2020ம் ஆண்டிலிருந்து இன்று வரை திரு. கிருஷ்ணன் அவர்கள் கோவில் தலைவராக சேவையாற்றி வருகிறார்.
இந்த கோவில் நிலத்திற்கு பல வழிகளில் பாடுபட்டவர்களில் முதலில் முன்னால் ஜோகூர் மாநில ம.இ.கா. தலைவராக செயலாற்றிய தான் ஸ்ரீ டத்தோ ஜி. பாசமாணிக்கம் ஐயா அவர்கள். அதே வேளையில் பணமாகவும், பொருளாகவும் ஜோகூர் மாநில அரசாங்கத்திடம் இருந்து மாநியம் பெற்றுத் தந்தார்.
இதை தொடர்ந்து, பல வேளைகளில் நேரம் காலம் பார்க்காமல் நமது கோவிலுக்கு நில பிரச்சனை வரும் போதெல்லாம், ஜோகூர் மாநில அரசாங்கத்திடம் (எஸ்.இ.டி.சி) நிர்வாகத்தினரிடம் கோவிலுக்கு நிரந்தர நிலம் கேட்டு வந்தார்கள். தான் ஸ்ரீ டத்தோ ஜி. பாசமாணிக்கத்திற்கு பிறகு ஜோகூர் மாநில மா.இ.கா. தலைமைப் பொறுப்பு ஏற்ற டத்தோ K.S. பாலகிருஷ்ணன் அவர்கள் முயற்ச்சியில் கோவிலுக்கு 250 x 250 sq.ft. நிரந்தர நிலம் கிடைக்க பெற்றது.
அடுத்து ம.இ.கா. பாசீர் கூடாங் தொகுதி தலைவரும், ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் நிர்வாகத்தின் ஆலோசகரும் மற்றும் புதிய கோவில் கட்டிட குழு தலைவரும், ஆன்மீக சேவையாற்றி கொண்டிருக்கும் ஆதவன் திரு. சபாபதி அவர்களும் இந்த கோவில் நில பிரச்சனைக்காகவும் மற்றும் கோவிலுக்கு மாநியங்கள் பெற்று தருவதிலும் தங்கள் பங்கை ஆற்றியுள்ளார். மாநில அரசாங்கத்திடனும், எஸ்.இ.டி.சி ஜோகூர் லெண்ட் (JOHOR LAND) நிறுவனத்திடமும், மா.இ.கா. மூலமாக பல நல்ல சேவைகளை நமது கோவிலுக்காக செய்துள்ளார். மேலும் கோவில் கட்டிட குழு தலைவராக பல திட்டங்களைக் கோவில் வளர்ச்சிக்காக தனது கட்டிட குழு நிர்வாகத்துடன் செய்து கொண்டிருக்கிறார்.
இப்பொழுது புதிய கோவில் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் புதிய நிலம் பெற்று தந்த அன்றைய ஜோகூர் மாநில முதல் அமைச்சர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ காலீட் நோர்டின் அவர்கள், கட்டிட குழு தலைவர் ஆதவன் திரு. சபாபதி அவர்களுடன் மாநியங்கள் பெற்று தந்துள்ளார். அது மட்டும் இல்லாமல் கோவிலுக்கு அரசாங்கத்திடமிருந்து மாண்புமிகு டத்தோ ஸ்ரீ காலீட் நோர்டின் அவர்கள் நில பட்டாவை பெற்றுத் தந்தார்.
புதிய கோவில் கட்டிடத்திற்கு அடி கல் நாட்டு விழா (பூமி பூஜை) அவர் தலைமையில் நடைப்பெற்றது. இது நமது கோவிலுக்கு ஒரு பெருமையும் கூட. இந்த நிகழ்வு நமது கோவிலுக்கு ஒரு வரலாற்று சிறப்பு. இவ்வேளையில் டத்தோ ஸ்ரீ காலீட் நோர்டின் அவர்களுக்கு கோவில் நிர்வாகமும், கோவில் கட்டிட குழுவும் நன்றியினையும், வாழ்த்தினையும் கூற கடமைப்பட்டுள்ளோம்.
இங்கு கம்பீரமாக வீற்றிருக்கும் அம்பாளின் அருளால் புதிய கோவில் கட்டிட பணி நடந்தேரிக்கொண்டிருக்கிறது. இப்போது கோவில் கட்டிட பணி எந்தவித சிரமுமின்றி முடியவும், அதே வேளையில் கூடிய விரைவில் கும்பாபிஷேகம் மிக சிறந்த முறையில் நடைப்பெறவும் எல்லாம் வல்ல அம்பாளின் ஆசியும் அருளும் மற்றும் அன்னையின் கடைக் கண் பார்வையையும் கிடைக்க வேண்டுவோம்.
குறிப்பு:
புதிய ஆலயத்தின் கட்டிட திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் ஆலயத்தை முழுமையாக கட்டி முடிப்பதற்கு நிதி பற்றாகுறையாக உள்ளது. ஆகையால், ஆலய கட்டிட குழுவும், ஆலய நிர்வாகமும் பொது மக்களாகிய தங்களிடம் இரு கரம் கூப்பி உங்களால் இயன்ற பண நன்கொடைகளை வழங்கும் படி மிக்க பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நன்கொடைகளை வழங்க விரும்பும் பக்த பெருமக்கள், கோவில் கட்டிட குழு நிதி கணக்கில் தங்கள் நன்கொடைகளை செலுத்தலாம். கோவில் கட்டிட குழு நிதியின் வங்கி எண் MAYBANK : 501244604393 என்ற எண்ணில் நன்கொடையைச் செலுத்தலாம்.
எங்களுடன் ஆலய திருச்சேவையில் பங்கேற்குமாறு மிக பணிவன்புடனும், தாழ்மையுடனும் அம்பாளின் சார்பாக கோவில் கட்டிட குழுவினரும் மற்றும் நிர்வாக சபையினரும் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி. வணக்கம்.
சுபம்.